தற்போதைய செய்திகள்

காதலனை மறக்க பெண்ணிற்கு மாந்தீரிகம் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில், காதலனை மறக்க மாந்தீரிகம் செய்யப்பட்ட பெண், வீட்டிலிருந்து தப்பி, காதலனை திருமணம் செய்து, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.

சின்னசேலம் அருகே உள்ள பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணனும் திரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம், பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து, கல்வராயன் மலைக்கு ஜெயஸ்ரீயை அழைத்துச் சென்று, காதலனை மறக்க மாந்தீரிகம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை ஏற்காத ஜெயஸ்ரீ, வீட்டிலிருந்து வெளியேறி, தேங்காய்நத்தம் மாரியம்மன் கோயிலில், காதலனை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், இருவரும் அங்கிருந்து சென்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை