தற்போதைய செய்திகள்

"கடைக்குட்டி சிங்கம்" புகழ் நடிகை அர்த்தனாவிடம் அத்துமீறிய தந்தை.. வீடியோ வெளியிட்டு முகத்திரையை கிழித்தார்

தந்தி டிவி

வீட்டின் சுவர் ஏறி குதித்து, தனது தந்தை தன்னை கொலை மிரட்டல் விடுத்து செல்வதாக இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டு புகாரளித்திருக்கிறார் கடைக்குட்டி சிங்கம் திரைப்பட நடிகை. சினிமா ரசிகர்கள் பலரும் நடிகைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

இளம் வயதிலே கேரள திரையுலகில் பிரபலம் ... தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 வெவ்வேறு அடித்தளம் கொண்ட சினிமா திரையுலகில் அடுத்தடுத்து நடித்து வருபவர் தான் நடிகை அர்த்தனா பினு...

தமிழில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மூலம் பட்டிதொட்டி வரை பிரபலமான இவரின் சினிமா மீதான காதலை நடிகர் விஜய் சேதுபதியின் கருப்பன் திரைப்படம் உணர்த்தும்...

கிட்டத்தட்ட ஹீரோயினாக தனது மார்க்கெட்டை உயர்த்த முயற்சி செய்வார் என பலரும் எதிர்பார்க்க, கருப்பன் திரைப்படத்தில் ஹீரோயினுக்கு அண்ணியாக, சற்று வயதான கதாபாத்திரத்தில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்...

இப்படி சினிமாவில் எப்படியாவது சாதித்தே தீரவேண்டும் என ஓடிக்கொண்டிருக்கும் அர்த்தனா பினுவுக்கு, அவரது தந்தையே முட்டுக்கட்டையாக இருப்பதாக, இன்ஸ்டாவில் பதிவிட்டு தனது மொத்த மன வேதனையும் கொட்டி தீர்த்திருக்கிறார்...

நடிகை அர்த்தனா பினுவின் தந்தையான விஜயகுமாரும் ஒரு மலையாள நடிகரான நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே அர்த்தனா பினுவின் தாயுடன் விவாகரத்து பெற்று பிரிந்திருக்கிறார்...

இந்நிலையில், தனது அம்மா, தங்கை மற்றும் 85 வயது பாட்டியுடன் தனியே வசித்து வரும் அர்த்தனா பினுவுக்கு, அவரது தந்தை தொடர்ந்து இடையூறு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது...

தான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து குழுவுடன் தகராறு செய்தும், தான் ஒப்பந்தமாகும் திரைப்படங்களில் இருந்து தன்னை நீக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தனது தந்தை மீது பல முறை போலீசில் புகாரளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவிக்கிறார் அர்த்தனா பினு...

இதை ஒருவாறு அர்த்தனா பினு சமாளித்து வந்த நிலையில், அடுத்த கட்டமாக தனது பெரும் அத்துமீறலை நிகழ்த்தியிருக்கிறார் அவரது தந்தை...

கேரளாவில் வசித்து வரும் அர்த்தனா பினுவின் வீட்டினுள் சுவர் ஏறி குதித்திருக்கிறார் அவரது தந்தை... நல்வாய்ப்பாக வீடு தாழிடப்பட்டிருந்த நிலையில், வீட்டினுள் இருந்த அர்த்தனா பினு, அவரது தாய், தங்கை மற்றும் பாட்டியை ஜன்னல் வழியாக கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமார், சிறிது நேரம் கழித்து வந்த வழியே சுவர் ஏறி தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தந்தை தப்பி செல்லும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு, தனது தந்தையால் தான் சந்தித்து வரும் பிரச்சினைகளையும், தற்போது தங்களுக்கு நடந்ததையும் சேர்த்து பதிவிட்டு மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை அர்த்தனா பினுவிற்கும் ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்..

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்