தற்போதைய செய்திகள்

மனுதாரருக்கு நீதிபதி வைத்த செக் -"ரூ.3.5 லட்சம் டெபாசிட் செய்க"

தந்தி டிவி

கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்குகள் தொடர்ந்த நபர், தனது உண்மைத்தன்மையை நிரூபிக்க 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், கோயில்கள் தொடர்பான ஏழு வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

இவை விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் எந்த கோயிலின் பக்தர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, எல்லா கோயில்களிலும் பக்தர் என பதிலளித்தார்.

இதனால், மனுதார‌ர் தனது உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், 7 வழக்குகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்குகள் நியாயமானவை என நிரூபணமானால் தொகை திருப்பித் தரப்படும் என்றனர். 

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்