தற்போதைய செய்திகள்

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக நீதிபதி கருத்து

தந்தி டிவி

குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு தான் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த வஹிதா பேகம் என்பவர், அண்ணாமலை பல்கலையில் சிறப்பு அலுவலராக, தொலைதூர கல்வி திட்டத்தின் திண்டுக்கல் மையத்தில் நியமிக்கப்பட்டார்.

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம், பொதுநியமனத்திற்கு பொருந்தாது என்று கூறி சிறப்பு அலுவலர் நியமனத்தை ரத்து செய்து ஆய்வக பணியாளராக பதவி இறக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வஹிதா பேகம் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இளங்கலை பட்டம் பெற்ற பிறகே முதுகலை பட்டம் பெற வேண்டுமென்ற எந்த வரையறையும் அண்ணாமலை பல்கலையில் இல்லை என்றும் வேலை வாய்ப்புக்கு தகுதியில்லாத போது, ஏன் இந்த கல்வி முறையை வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு தான் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா