தற்போதைய செய்திகள்

"ஒவ்வொரு கிராமத்திலும் ஜியோ 5ஜி" "ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு" முகேஷ் அம்பானியின் மெகா திட்டம்

தந்தி டிவி

இந்தியா மிகவும் வளமான பாதையில் உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவெடுக்க அடித்தளமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்திலும் ஜியோவின் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்றார்.

மேலும் உத்தரபிரதேசத்தில் ஜியோ, சில்லறை மற்றும் புதுப்பிக்கத்தக்க வணிகங்கள் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் கூடுதலாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அதிகமான வேலை வாய்ப்பை உருவாகும் என்றார். 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு