தற்போதைய செய்திகள்

நகை வாங்குவது போல் நடித்து நைசாக பாக்கெட்டுக்குள் சுருட்டிய நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

மார்த்தாண்டத்தில், நகை வாங்குவது போல் நாடகமாடி ஒன்றே கால் சவரன் நகையை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காப்புகாடு பகுதியை சேர்ந்த விஜூ என்பவர், மார்த்தாண்டம், குன்னத்தூர் பகுதிகளில் நகைக் கடை நடத்தி வருகிறார். நகைகளை சரிபார்த்த போது, 10 கிராம் நகை குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜூ, சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்தார். அதில், நகை வாங்குவது போல் நாடகமாடிய அடையாளம் தெரியாத இருவர், நகையை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. மேலும், குன்னதூரில் உள்ள மற்றொரு கடைக்கும் சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்