தற்போதைய செய்திகள்

"நகைகளை கழட்டி வீட்டில் வச்சிட்டு வாங்க" நம்பிய மூதாட்டிக்கு ஆப்பு வைத்த மர்ம பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் 7 அரை சவரன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஜங்களாபுரம் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஜெயம்மாள் என்பவரிடம் முதியோர் உதவி தொகை வாங்கி தருவதாகவும், நகைகளை கலட்டி வீட்டில் வைத்து விட்டு வரும் படியும் பெண் ஒருவர் கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி நகைகளை வீட்டில் வைத்துவிட்டு பெண்ணுடன் ஜோலார்பேட்டை சென்றுள்ளார். பின்னர் தனது மணிபர்சை வீட்டில் வைத்து விட்டு வந்தாக கூறி மூதாட்டியின் வீட்டு சாவியை வாங்கி சென்று பெண் நகைகளை திருடி சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் மூதாட்டி வீட்டின் அருகே உள்ள சிசிடிவியை கொண்டு நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்