தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டு விவகாரம் நடத்தலாமா..? - ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுப்பிய மக்கள்.. கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி
• திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. • பொங்கலூர் ஒன்றியம் அழகுமலை ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம் வேலாயுதம்பாளையத்தில், அதன் தலைவர் தூய மணி தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். • அழகுமலையில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகளால் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கேடு அடைந்து விட்டதாகவும், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி ஒரு தரப்பினர் முழக்கங்கள் எழுப்பினர். • அப்போது மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். • அப்போது, அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். • பின்னர் பேசிய ஊராட்சி தலைவர் தூய மணி, ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், இது குறித்து மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இதுவரை அறிவிப்பு வராததால் போட்டி நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்