தற்போதைய செய்திகள்

"ஜெ. ஒரே வாரத்தில் வீடு திரும்பி இருக்கலாம்" ஆணையம் அதிர்ச்சிகர தகவல்

தந்தி டிவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே வாரத்தில் வீடு திரும்பியிருக்கும் வாய்ப்புகள் இருந்ததாக ஆறுமுக சாமி ஆணையம் அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில், ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையின் இணைப்பும் தற்போது வெளியாகியுள்ளது...

அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே இதய அறுவை சிகிச்சை நிபுணர் கிரிநாத் சிகிச்சை அளித்திருந்தால்,

ஒரே வாரத்தில் ஜெயலலிதா நலமடைந்து வீடு திரும்பியிருப்பார் என்று ஆறுமுக சாமி ஆணையம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், சிகிச்சையில் ஆலோசனைகள் வழங்கிய கிரிநாத், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்