தற்போதைய செய்திகள்

"விடிய விடிய இந்த கூத்து தான்.. உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கோம்" - கதறும் மக்கள்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் வெத்தலைக்கரனூரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்த்துள்ளனர். அப்போது சிதறிய கற்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து, வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவும், இரண்டு சிறுவர்களுக்கும் கால்நடைகளுக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்குவாரியிலிருந்து விழும் கற்களால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், கால்நடைகள் உயிரிழப்பதாகவும் அப்போது அவர்கள் குற்றஞ்சாட்டினர். உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் குவாரி செயல்பட்டு வருவதாகவும் கூறிய அவர்கள், இதுதொடர்பாக பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்ததோடு, குவாரியை உடனடியாக மூட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்