தற்போதைய செய்திகள்

"சோனியா இல்ல..வசுந்தரா தான் தலைவி"...அசோக் கெலாட்டை விமர்சித்த சச்சின் பைலட் - காங்கிரஸ்-க்குள் வெடித்த மோதல்

தந்தி டிவி

கடந்த 2020ம் ஆண்டு தனது அரசை கவிழ்க்க மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்ளிட்டோர் சதி செய்ததாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியிருந்தார். ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆதரவு தர மறுத்துவிட்டதாகவும் கெலாட் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், அசோக் கெலாட்டின் பேச்சைக் கேட்ட பிறகு, அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல, வசுந்தரா ராஜே சிந்தியா என்று தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

தனது கட்சி எம்.பி, எம்.எல்.ஏ.களை விமர்சனம் செய்வதும், பாஜக தலைவர்களை பாராட்டுவதும் இதுவே முதன்முறை என்று சச்சின் பைலட் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்களை அவர் அவமானப்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஊழலுக்கு எதிராக 5 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாகவும் சச்சின் பைலட் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்