தற்போதைய செய்திகள்

ஆலியா பட்டின் சகோதரிக்கு வந்த சோதனை - சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு

தந்தி டிவி

பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் சகோதரி வாங்கியது செல்லாது என்ற உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நடிகர் பிரசாந்த் உடன் 'கல்லூரி வாசல்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர், பூஜா பட். பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட்டின் சகோதரியான இவர், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள ஜெகதாலா என்ற கிராமத்தில், ஒரு ஏக்கர் நிலத்தை கடந்த 1990ஆம் ஆண்டு வாங்கி உள்ளார். இருப்பினும், பட்டியல் இனத்தவரை சேர்ந்தவரான எம்.குப்பன் என்பவருக்கு, வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன், அந்த நிலம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அதனை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டும் எனவும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூஜா பட் வழக்கு தொடர்ந்த நிலையில், கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்