தற்போதைய செய்திகள்

"நான் இன்னும் டொக்கு ஆகல தம்பி..." - பாண்டியாவுக்கு பாடம் எடுத்த இஷாந்த் சர்மா

தந்தி டிவி

குஜராத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 44வது போட்டியில், டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின.இப்போட்டியில் முதலில் பேட் செய்ய டெல்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமன் ஹக்கீம் கான், 51 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 131 ரன்கள் இலக்கோடு குஜராத் அணி களமிறங்கிய நிலையில், அந்த அணியின் பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார்.கடைசி 12 பந்துகளில் குஜராத் அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நோர்கியா பந்துவீச்சில் ராகுல் தெவாட்டியா ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார்.இதனால் கடைசி ஒவரில் வெற்றிக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து தெவாட்டியா விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்