தற்போதைய செய்திகள்

“வீடு வாடகைக்கு இருக்கா?“ சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - தாயை காக்க மகன் செய்த செயல்

தந்தி டிவி

சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த சொர்ணாதேவி என்ற மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 2 பேர், வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது திடீரென மூதாட்டியை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, கழுத்தில் கிடந்த தங்க செயின், வளையல், மோதிரம் என 8 சவரன் நகைளை, மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சி உதவியுடன், கோயம்புத்தூரை சேர்ந்த அஜித் மற்றும் பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதில், அஜித்தின் தாய், டி.பி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்கு பணம் இல்லாததால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. 2 பேரிடம் இருந்தும் கொள்ளையடித்த 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்