தற்போதைய செய்திகள்

பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்? - வெளியான பரபரப்பு தகவல் | thoppu venkatachalam

தந்தி டிவி

திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மறுப்பு தெரிவித்துள்ளார். 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2021ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இதனால், பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். ஆனால், திமுக கரை வேட்டியை கட்டாமலும், தனது காரில் திமுக கொடியை கட்டாமலும் இருந்த‌து விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தோப்பு வெங்கடாசலம் இணையப் போவதாக தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தோப்பு வெங்கடாசலம், தற்போது வரை திமுகவில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்