தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டிக்கெட்... சென்னையில் 8 பேர் கைது

தந்தி டிவி

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அதன் பேரில், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் ஐபிஎல் கிரிக்கெட் விற்பனை செய்ததாக, 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து14 டிக்கெட்டுகள்,18 ஆயிரத்து 800 ரூபாய் பணம் மற்றும் 3 செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்