தற்போதைய செய்திகள்

ஐபிஎல் மினி ஏலம்.. பிசிசிஐ அறிவிப்பு

தந்தி டிவி

2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், வரும் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மினி ஏலத்தில் பங்கேற்க இந்தியா உட்பட 15 நாடுகளை சேர்ந்த 991 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதில் 714 பேர் இந்திய வீரர்கள் என்றும், 277 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 57 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 52 பேரும், வெஸ்ட் இண்டீசில் 33 பேரும், இங்கிலாந்தில் 31 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இந்த மினி ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்