தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் கோப்பை போட்டியில் முறைகேடு..முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் விசாரணை

தந்தி டிவி

சிவகங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்திய அப்போதைய மாவட்ட விளையாட்டு அலுவலர் கீதா, போட்டிகளில் தேர்வான வீரர்களுக்கு போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் 1 லட்சத்து 23 ஆயிரத்து 400 ரூபாயை கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தந்தி டிவியில் கடந்த மார்ச் மாதம் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை, கீதாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் கீதா காலை 10 மணிக்கு ஆஜரானார். பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற விசாரணையில், அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் திணறியதாக கூறப்படுகிறது.

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?

Puducherry Liquorbottles | புதுவையில் இருந்து 4.5 லிட்டர் மது எடுத்து வந்தால் போலீஸ் பிடிக்காதா?

Water Can Supply | தண்ணீர் கேனை இப்படி போடவில்லை என்றால்.. ரூ.5000 அபராதம் போடப்படும்

Madurai | விருதுநகர் பட்டாசு ஆலை கோர விபத்து.. இழப்பீடு கோரி வழக்கு

Chennai Flights | விமான மார்க்கமாக சென்னை திரும்பிய பயணிகளுக்கு எதிர்பாரா ஷாக்