தற்போதைய செய்திகள்

நாளை முதல் 5 இடங்களிலிருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கம் - தீபாவளி பண்டிகையையொட்டி நடவடிக்கை

தந்தி டிவி

நாளை முதல் 5 இடங்களிலிருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கம் - தீபாவளி பண்டிகையையொட்டி நடவடிக்கை

தீபாவளியை முன்னிட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையின் ஐந்து இடங்களிலிருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 23 ஆம் தேதி வரை, சென்னையில் ஐந்து வெவ்வேறு பகுதிகளிலிருந்து, வெளியூர் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்பிடிப்பூண்டி, திருப்பதி செல்லும் பேருந்துகளும், கே.கே நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக கடலூர், புதுச்சேரி செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதேபோல் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து வேலூர், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்