தற்போதைய செய்திகள்

மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்ததால் ஊர்க்காரர்கள் முன் காலில் விழ வைத்த கொடூரம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவரை, ஊர்க்காரர்கள் முன்னிலையில் காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரிவலம்வந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்வர் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இதனால் அவரை ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலமுருகன் கோயில் திருவிழாவில் பங்கேற்க வேண்டுமானால் ஊர்காரர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து பாலமுருகன் கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்