தற்போதைய செய்திகள்

பெண்களின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட கொடூரன்... இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்...! - அதிர வைக்கும் பின்னணி

தந்தி டிவி
• பெண்களின் படங்களை மார்பிங் செய்து, சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியிட்டதாக, ஈரோட்டை சேர்ந்த ஆட்டோ ரஞ்சித் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். • சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலையைச் சேர்ந்த யூடியூபர் தயாள பிரபு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். • அதில், தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு, பணம் பறிக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். • இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிவகங்கை சைபர் கிரைம் போலீசார், ஈரோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் சென்னையைச் சேர்ந்த சுகுணா என்பவரைத் தேடி வருகிறார்கள். • சுகுணா தலைமையிலான கும்பல், பலரின் ஆபாச படங்களை வெளியிட்டு, மிரட்டி வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்