தற்போதைய செய்திகள்

பட்டா கத்திகளோடு இன்ஸ்டா ரீல்ஸ்... ரவுடி போஸ் கொடுத்து வசமாக சிக்கிய இளைஞர்

தந்தி டிவி

பல்லாவரம் அருகே நானும் ரவுடிதான் என வடிவேல் பாணியில் ஏரியாவை கலக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெருவை கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞர், ஒல்லியாக இருப்பதால் தன்னை யாரும் மதிக்கவில்லை எனவும், எப்படியாவது பெரிய ரவுடியாகிவிட்டால் தன்னுடைய நண்பர்கள் தன்னைப் பார்த்து பயப்படுவார்கள் எனவும் நினைத்து விதவிதமாக பட்டாகத்திகள் வாங்கி வைத்துகொண்டு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வந்துள்ளார். பின்னர் ஒரு படி மேலே போய் போலீசாருக்கே தெரியாமல், போலீசாரின் வாகனங்களின் அருகே நின்றவாறு போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். இந்தநிலையில் அவர் தனது பிறந்தநாளையொட்டி, போலீஸ் வாகனத்தில் அருகே நிற்கும் வீடியோவுடன், பெரிய அளவிலான பட்டா கத்தியை பிடித்து நிற்பது போன்ற வீடியோக்களை இணைத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அவர் வசிக்கும் பகுதியினை சேர்ந்தவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். வீடியோக்களை பார்த்து அதிர்ந்த போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்