தற்போதைய செய்திகள்

ரீல்ஸ் எடுக்கும் போதே இன்ஸ்டா பிரபலத்தை இன்ஸ்டன்ட்டாக தட்டி தூக்கிய சென்னை போலீஸ்..! "உல்லாசமாக இருக்க..." பகீர் வாக்குமூலம்

தந்தி டிவி
• செங்கல்பட்டு மாவட்டத்தில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த இன்ஸ்டா பிரபலத்தை, இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது போலீசார் கைது செய்தனர். • தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவரின் மனைவி மாலதி. இவர்களின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதவை உடைக்காமலயே 3 சவரன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. • இதனடிப்படையில் அருகில் உள்ள சிசிடிவியை காட்சிகளை சோதனை செய்த போலீசார், மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் அனிஷ்குமாரி என்ற பெண்ணை கைது செய்தனர். • அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் குற்றத்தை மறுத்த அனிஷ்குமாரி, பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார். இதில், இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதால் வரும் வருமானம் போதவில்லை என்றும், உல்லாசமாக இருப்பதற்காக திருட்டில் இறங்கினேன் எனவும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. • இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை -ல் விற்றதற்காக அனிஷ்குமாரி கைது செய்யப்பட்டதும் தெரியவர, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்