தற்போதைய செய்திகள்

பிறந்து சில மணி நேரத்திலே சிசு பலி.. உடலை கையில் வைத்து கதறும் பெற்றோர் | Sirkazhi | Babydead

தந்தி டிவி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை உயிரிழந்ததற்கு செவிலியர்களின் கால தாமதமான சிகிச்சை தான் காரணம் என போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புளியந்துறையைச் சேர்ந்த ரம்யா, பிரசவ வலி ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் காலை 11 மணி அளவில் சேர்க்கப்பட்ட நிலையில், பிற்பகல் 3 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள்

காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி இறந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியவாறு தலைமை மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து இறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்