இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட இருக்கும் பெட்ரோல் பைப்லைன் திட்டம், இலங்கைக்கான குறைந்த விலை மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த எரிபொருள் வளத்தை உறுதி செய்யும் எனக் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைந்து வருவதற்கு வாழ்த்து தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ரணில், இந்தியாவின் வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.