தற்போதைய செய்திகள்

பத்திரப்பதிவு சேவைக்கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்...

தந்தி டிவி

பத்திரப் பதிவுத் துறை சேவைக் கட்டணங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் இருந்த நிலையில்,இன்றுமுதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, 20 இனங்களுக்கான கட்டணங்கள் மற்றும் சில ஆவணப் பதிவுகளுக்கான,பதிவு மற்றும் முத்திரைக் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும்,குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு,அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரமாகவும்,தனி மனை பதிவுக் கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது.மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு,பதிவுக் கட்டணம் 10,000 என்று இருந்த நிலையில், சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றப்பட்டுள்ளது.பத்திரப்பதிவு சேவைக்கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்

CM Vijay | Kolathur MLA V.S.Babu | கொளத்தூர் MLAவை பார்க்க மருத்துவமனைக்கே நேரில் வந்த CM விஜய்

Supreme Court | தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் | மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்

ஓசூரில் கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை

CM Vijay | Kolathur MLA | ஹாஸ்பிடலில் கொளத்தூர் எம்.எல்.ஏ | நலம் விசாரிக்க நேரில் சென்ற CM விஜய்

CM Vijay | Kolathur MLA | ஹாஸ்பிடலில் புகுந்த CM விஜய்.. மருத்துவ குழுவிடம் விசாரணை