தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியை அலற விட்ட சம்பவம் - 9 பேர் அதிரடி கைது

தந்தி டிவி

மீனாட்சி பட்டி கிராமத்தில், இம்மானுவேல் சேகரன், சுந்தரனார் புகைப்படங்கள் இருந்த டிஜிட்டல் பேனர் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள், பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தது தெரியவந்தது. இதை கண்டித்த மீனாட்சி பட்டி கிராம மக்கள், தீ வைத்த நபர்களை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து, மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில், இருதரப்பைச் சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மீனாட்சி பட்டி கிராம இளைஞர்களுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அணியாபரநல்லூர் இளைஞர்கள் தீ வைத்தது தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்