தற்போதைய செய்திகள்

கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் பூமியில் சாய்ந்த சிரசு? - பரிகார பூஜை செய்து சிறப்பு வழிபாடு

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த சிரசு திருவிழாவில் தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு கொண்டுவரப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிரசு தரையில் சாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மூலவர் சன்னதி அருகே சிறப்பு பரிகார பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு யாகம் வளர்த்து பிராயசித்த வேள்வி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகஅதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் விழா கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்