தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழை..!கடலாக மாறிய சாலைகள்..!

தந்தி டிவி
• கும்பகோணம் மாநகராட்சி பகுதியில், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பாணாதுரை, மோதிலால் வீதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். • காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓரிக்கை, செவிலிமேடு, ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கோடை மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. • கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மணலூர்பேட்டை, ஆதிதிருவரங்கம், வாணாபுரம், திருப்பாலபந்தல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது. • உளுந்தூர்பேட்டை, அதன் சுற்றுப்புறங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்