தற்போதைய செய்திகள்

சீர்காழியில், தேவார செப்பேடுகள், பூஜைப்பொருட்களும் கண்டெடுப்பு.. மீட்கப்பட்ட சிலைகள் ​கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பு

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சட்டநாதர் கோயிலில், 32 ஆண்டுகளுக்குப்பின்னர், வரும் மே 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக, கோயில் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, மண்ணில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள் உள்ளிட்ட 22 சிலைகள் கிடைத்தன. மேலும், 55 பீடங்கள், பூஜை பொருட்கள் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை, ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் ஆகியோர் பார்வையிட்டனர். மீட்கப்பட்ட சிலைகள், ​கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்