தற்போதைய செய்திகள்

கேடி பெண்ணும், கில்லாடி போலீஸும்..திகிலூட்டும் தில்லாலங்கடி கடத்தல்..!

தந்தி டிவி

வாழப்பாடி அருகே சேசஞ்சாவடிபகுதியை சேர்ந்த செந்தில்குமாரின் 2 வயது குழந்தை, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானது. அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், இதுதொடர்பாக விசாரித்த போது, பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் உறவினரான பழனியம்மாளுடன் குழந்தையை பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில், சந்தேகத்தின் பேரில் பழனியம்மாளை பிடித்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது, சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் குழந்தையை விட்டு விட்டு வந்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் குழந்தையை மீட்ட போலீசார்,பழனியம்மாளை கைது செய்ததுடன், இரண்டரை லட்சம் பணத்திற்காக அவர் கடத்தலில் ஈடுபட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்