தற்போதைய செய்திகள்

ஒரே நொடியில் இடிபோல் மண்டையில் விழுந்த பேருந்து நிழற்குடை - 5 பேர் நிலை?

தந்தி டிவி

சென்னை பெசன்ட் நகரில், பேருந்து நிழற்குடை சாய்ந்து விழுந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்

சென்னை பெசன்ட் நகர் 7-வது பிரதான சாலையில் வண்ணத்துறை பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வருகிறது இந்நிலையில், அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை காற்றின் வேகத்தால், திடீரென சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்துக்காக காத்திருந்த 5 பயணிகளுக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தனர். தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, உடனடியாக நிழற்குடையை கிரேன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்