அதிக வட்டி தருவதாகக் கூறி 84 ஆயிரம் பேரிடமிருந்து சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்ததாக, ஐ.எப்.எஸ். நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை இவ்வழக்கில் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து இவ்வழக்கை ஆய்வு செய்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக விருகம்பாக்கத்தில் உள்ள முக்கிய தரகரின் வீட்டில், அமலாக்க துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுள்ள அமலாக்கத்துறையினர், முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்