ஜீ 5 ஒரிஜினல் - ஸ்ரீ நிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகும் பேப்பர் ராக்கெட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன், விஜய் ஆண்டனி, மிர்ச்சி சிவா, சின்னி ஜெயந்த், கருணாகரன், காளிதாஸ் ஜெயராம், நடிகை தான்யா ரவிச்சந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் மற்றும் இயக்குனர்கள் மிஷ்கின், மகிழ் திருமேனி, மாரி செல்வராஜ் மற்றும் பாலாஜி தரணி தரன், நடிகை விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.