தற்போதைய செய்திகள்

“ரூ.2.5 கோடி சுருட்டிவிட்டேன்“... ஓப்பனாக அடித்த பாஜக எம்.பி - ஒரே வீடியோ ஆடிப்போன பாஜக

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சோயம் பாபு... பாஜகவை சேர்ந்த இவர், சமீபத்தில் கட்சிக்காரர்கள் மத்தியில் பேசிய வீடியோ வெளியாகி தெலுங்கானா அரசியலை பரபரப்பாக்கியிருக்கிறது. அதில் தொகுதி வளர்ச்சி நிதிக்காக மத்திய அரசு அனுப்பிய தொகையை ஆட்டையை போட்டுவிட்டதாக பேசியிருக்கிறார் சோயம் பாபு... ஏதோ கிரிக்கெட் மேட்சில் செஞ்சூரி போட்டது போல... தொகுதி வளர்ச்சி நிதியாக ரூ. 2.5 கோடி வந்தது... அதில் சொந்தமாக வீடி ஒன்றை கட்டியதாகவும், மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தடாலடியாக பேசியிருக்கிறார். இதையெல்லாம் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ததாக கூறியிருக்கும் சோயம் பாபு...

தானாவது குறைந்த தொகையையே பயன்படுத்தியதாகவும், முந்தைய எம்.பி.க்கள் எல்லாம் மொத்த தொகையையுமே விழுங்கிவிட்டார்கள் என நியாயம் கற்பித்திருக்கிறார். இப்போது அவரது பேச்சுதான் தெலுங்கானா அரசியலில் ஹைலைட் டாபிக்... பலரும் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்க... தம்பி தமாசா பேசியதை உண்மைனு நம்பீட்டிங்க என்று அப்படியே பல்டி அடித்திருக்கிறார் சோயம் பாபு...

கட்சியில் இருக்கும் பாஜக தலைவர்கள்தான் தனக்கு எதிராக சதி செய்வதாக கூறியிருக்கும் சோயம் பாபு, தான் தொகுதி நிதியை தவறாக பயன்படுத்தியதை உறுதி செய்தால் அரசியலைவிட்டு வெளியேறவும் தயார் என சவால் விடுத்திருக்கிறார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கட்சி நிகழ்வில் பேசப்பட்ட வீடியோவை பொது வெளியில் பரப்பியிருக்கிறார் என குற்றம் சாட்டியிருக்கிறார். தெலுங்கானாவில் இவ்வாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகி வரும் பாஜகவுக்கு சோதனையாக சோயம் பாபு பேச்சு வெளியாகி சமூக வலைதளங்களில் அல்லல்படுகிறது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை