தற்போதைய செய்திகள்

மனைவியின் தகாத உறவால் கணவர் ஆத்திரம் - மருத்துவமனைக்குள் புகுந்து கள்ளக்காதலனுக்கு வெட்டு

தந்தி டிவி

மொடக்குறிச்சி அருகே சாமிநாதபுரத்தை சேர்ந்த கறிக்கடைக்காரர் நந்தகோபால். இவரின் மனைவி ராஜேஸ்வரி.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் இளங்கோ என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து நந்தகோபால் தன் மனைவியை எச்சரித்த நிலையில், ஒரு நாள் தன் மனைவி அந்த இளைஞருடன் பேசி கொண்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்தார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரையும் அரிவாளல் சரமாரியாக நந்தகோபால் வெட்டியுள்ளார்.

இதில் பலத்தகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்த தன் மனைவியை பார்க்க சென்ற நந்தகோபால் அங்கும் தன் மனைவியுடன் அந்த இளைஞர் இருப்பதை கண்டு கோபமடைந்தார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கறிக்கடை கத்தியால் அவரை வெட்டி விட்டு தப்பி சென்றார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் தப்பியோடிய நந்தகோபலை கைது செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்