தற்போதைய செய்திகள்

பாதாள சாக்கடை பணியில் மனிதர்களை ஈடுபடுத்த கூடாது... உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..!

தந்தி டிவி

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும், சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது

இந்த வழக்கு மீதான விசாரணையின் போது பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்கும் வகையில் விதிகள் இயற்றப்பட்டு, ஆகஸ்ட் 2022 அறிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சுத்தம் செய்யும் பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், விதிமீறுவோருக்கு எதிராக குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அதேபோல் பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,

இதை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள்அறிவுறுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை