தற்போதைய செய்திகள்

குடிநீரில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் - புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ சோதனை

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில், புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்ய வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், ஏற்கனவே 11 பேரின் ரத்த மாதிரி டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்த‌து. இதில், 3 பேருக்கு சோதனை செய்த நிலையில் எட்டு பேர் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ மற்றும் ரத்த பரிசோதனை செய்ய புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்த‌து. இதை பரிசீலித்த நீதிபதி சத்யா, புதிதாக 10 பேருக்கு பரிசோதனை செய்ய அனுமதி அளித்து, பட்டியலை சென்னை பகுப்பாய்வு மையத்திற்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். இந்த வழக்கில் 119 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்