தற்போதைய செய்திகள்

உயிருடன் துடிக்க துடிக்க நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த "மனித" காட்டேரி - குலைநடுங்கவிட்ட வீடியோ

தந்தி டிவி

கர்நாடகாவில், மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பனை, கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவனின் பதைபதைக்க வைக்கும் சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் சிக்பள்ளாப்பூர் பகுதியில், இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்களான விஜய் மற்றும் மாரேஷ் இருவரும் சேர்ந்து, சரக்கு வாகனத்தில் கிராமம் கிராமமாக சென்று ஆடை வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

தொழில் காரணமாக, மாரேஷின் வீட்டிற்கு , விஜய் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, மாரேஷின் மனைவி மாலாவும், விஜய்யும் சிரித்து பேசி பழகி வந்துள்ளனர். இதனால், தனது மனைவியும், விஜய்யும், தகாத உறவில் இருப்பதாக மாரேஷூக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கவே, ஆத்திரமடைந்த மாரேஷ், விஜய்யை பழிவாங்க நினைத்துள்ளார்.

அதன்படி நண்பரின் உதவியுடன் விஜய்யை வெறிச்சோடிய பகுதிக்கு மாரேஷ் அழைத்துச் சென்ற நிலையில், அங்கு மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கேறிய நிலையில், தனது மனைவி உடனான கள்ளத்தொடர்பு குறித்து, விஜய்யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மாரேஷ். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடங்காத மாரேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால், விஜய்யின் கழுத்தை அறுத்துள்ளார்.

அப்போது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பின்னர் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, விஜய்யின் கழுத்தில் வழிந்தோடிய ரத்தத்தை மாரேஷ் குடித்துவிட்டு, உன்னை கொல்லட்டுமா? என வெறித்தனமாக நடந்து கொண்டார். இந்த சம்பவத்தை மாரேஷுடன் சென்ற அவரது நண்பர் வீடியோவாக எடுத்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்த விஜய்யின் சகோதரர், படுகாயமடைந்த நிலையில் கிடந்த அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், மாரேஷ் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு