தற்போதைய செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடு - செங்கோட்டையில் பயங்கரம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வீட்டின் கழிவுநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கோட்டை தாலுகா இலத்தூர் கிராமத்தில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பல ஆண்டுகளாக இந்த வீட்டில் யாரும் வசிக்காத நிலையில், வீட்டை வாடகைக்கு விடும் நோக்கில் புதுப்பித்துள்ளனர். அப்போது, வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது, கழிவு நீர் தொட்டியில் மனித எழும்புக்கூடு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எழும்புக்கூட்டை சேகரித்து, நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். எழும்பு கூடு ஆணா பெண்ணா என்பது மருத்துவ பரிசோதனையில்தான் தெரிய வரும் என கூறியுள்ள போலீசார், செங்கோட்டை பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்