தற்போதைய செய்திகள்

"உடலை கத்தியால் கீறி.. கறி மசாலாவை தடவி.." - தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

தந்தி டிவி

கேரளாவில், 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில், பெண்ணின் உடலில் கத்தியால் கீறி, மசாலா தடவி ரத்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா இலந்தூரில், தர்மபுரி பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தம்பதி பகவல் சிங், லைலா, ஷாபி ஆகியோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். நரபலி கொடுக்கப்பட்டபோது, பெண்ணின் உடலை கத்தியால் கீறி, அந்த இடத்தில் கறி மசாலாவை தடவி, அந்த பெண் துடிப்பதை அவர்கள் ரசித்ததும் தெரியவந்துள்ளது. ஷாபியின் தலைமையில் மேலும் சில பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் உறுதியாக நம்புகின்றனர். எனவே, கடந்த சில ஆண்டுகளில் எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.மேலும் ஷாபி 16 வயது முதல் 52 வயது வரையிலான நடவடிக்கைகள் குறித்து போலீசார் விரிவாக விசாரணை நடத்தவுள்ளனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்