தற்போதைய செய்திகள்

6 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார்... கதவை பூட்டி தாக்கிய 3 காவலர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை காவல்நிலையத்தில் வைத்து தாக்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட 6 பேருக்கு 3 காவலர்களும் இழப்பீடு வழங்ககோரி மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சங்கரன்கோவில் அருகே துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 6 பேர், கிராமத்தில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா முறைகேடு மற்றும் மணல் கொள்ளைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மனு அளித்த 6 பேரையும் கடந்த 2020 ஆம் ஆண்டு சிவகிரி காவல் நிலைய போலீசார்கள் அழைத்துள்ளனர். இதையடுத்து, விசாரணைக்காக சென்ற 6 பேரையும் காவல்நிலையத்தில் பூட்டி வைத்து 3 காவலர்கள் திட்டி தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்