தற்போதைய செய்திகள்

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" - மெரினாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..!

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில் அதிக அளவிலான குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சென்னையில் பெய்த கனமழையால், அடையாறு, கூவம் ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பைகள் கடலில் கலந்தன.

இவ்வாறு ஆற்றில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல், மதுபாட்டில்கள் போன்றவை மெரினாவில் கரை ஒதுங்கியுள்ளன.

இதனால் மெரினா கடற்கரை குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது.

மெரினா கடற்கரையில் நேரத்தை செலவழிக்க வந்த சென்னைவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் தேங்கி கிடந்த குப்பைகளை பார்த்து முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்