தற்போதைய செய்திகள்

காட்டுக்குள் சடலமாக கிடந்த ரியல் எஸ்டேட் அதிபர்.... கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்....

தந்தி டிவி

தாலி கட்டுன புருஷனா இருந்தாலும் நோ மீன்ஸ் நோ தானு கண்டிப்பா சொல்லி,கணவன திண்ணையில படுக்க வச்சி இருக்காங்க இங்க ஒரு மனைவி. கற்புக்கரசின்னு பாத்தா கடைசியில கள்ளக்காதலனோட சேர்ந்து கணவனோட கதையவே முடிச்சி இருக்காங்க....

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதி.

ஆள் நடமாட்டமே இல்லாத இந்த காட்டுப்பகுதிக்குள் அன்று ஆடு மேய்க்க சென்றவர்கள் கண்ட காட்சி தான் இது.

தீயில் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.

இறந்து கிடந்தது யார்...? நடந்தது கொலையா...? தற்கொலையா...? இறப்புக்கான காரணம் என்ன...? என பல கோணத்தில் விசாரனை விரிந்திருக்கிறது.

ஜனவரி முதல் மார்ச் வரை சுற்று வட்டார பகுதிகளில் காணமல் போனவர்களின் பட்டியலை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் சடலம் மீட்கப்பட்ட அடுத்த நாளே தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காணாமல் போனதாக ஒரு புகார் வந்திருக்கிறது.

உடனே பிரகாஷின் குடும்பத்தினரை அழைத்து சடலத்தை அடையாளம் காட்டி இறந்து போனது பிரகாஷ் தான் என உறுதிப்படுத்திருக்கிறது காவல்துறை.

இறந்து போன பிரகாஷுக்கு வயது 43. ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு லட்சுமி என்வருடன் திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில் தான் திடீரென காணாமல் போன பிரகாஷ் இப்படி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு பிரகாஷ் கோழை இல்லை.எனவே நடந்திருப்பது நிச்சயம் கொலை தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.ஆனாலும் சொல்லிக்கொள்ளும் படி ஊருக்குள் அவருக்கு எந்த பகையும் இல்லை.

பிறகு எப்படி பிரகாஷ் கொலை செய்யப்பட்டிருக்க முடியும் என பல்வேறு புரியாத புதிர்களுக்கு நடுவே, போலீசாரின் சந்தேகம் பிரகாஷின் மனைவி லட்சுமியின் மேல் விழுந்திருக்கிறது.

கணவன் இறந்த துக்கம் சிறிதும் இல்லாமல் சகஜமாக சுற்றி திரிந்திருக்கிறார்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் லட்சுமியிடம் கிடுக்குப்பிடி விசாரனை நடத்தி இருக்கிறார்கள்.அப்போது தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று எரித்து விட்டு நாடகம் போட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.காரணம் பாலியல் தொல்லை என்று சொல்லப்படுகிறது.

36 வயதான லட்சுமிக்கு ஓசூர் அருகே உள்ள கொத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த சின்னராஜ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்திருக்கிறது. மகன் வெளியூரில் படிக்க,கணவனும் ரியல் எஸ்டேட் தொழிலை கவனிக்க, லட்சுமியும் சின்னராஜும் உல்லாசமாக சுற்றி காதலை வளர்த்திருக்கிறார்காள்.

இந்த விஷியம் ஒரு கட்டத்தில் பிரகாஷுக்கு தெரிந்து மனைவியை கண்டித்திருக்கிறார்.ஆனாலும் லட்சுமி கள்ளக்காதலை விடுவதாயில்லை.

கள்ளக்காதலனின் மீதிருந்த மோகத்தால், கணவனை பக்கத்தில் கூட சேர்க்காமல் வெறுத்து ஒதுக்கி இருக்கிறார் லட்சுமி. பிரகாஷும் விடாமல் போதையை போட்டு விட்டு மனைவியை உல்லாசத்திற்கு அழைத்து வந்தி,ருக்கிறார்.

ஆனால் லட்சுமியின் பதில் நோ மீன்ஸ் நோ தான். சம்பவம் நடந்த அன்றும் பிரகாஷ் மனைவி லட்சுமியை தனது ஆசைக்கு இனங்க சொல்லி கட்டாயப்படுத்திருக்கிறார். ஆனால் அதற்கு லட்சுமி மறுப்பு தெரிவிக்கவே, மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் பிரகாஷ்.

கணவனின் எல்லை மீறிய செயல்களால் கடுப்பான லட்சுமி, வீட்டிலிருந்த கட்டையால் பிரகாஷை அடித்து கொலை செய்திருக்கிறார்.கொலையை மறைக்க, கள்ளக்காதலனின் உதவியோடு, டாடா ஏசியில் சடலத்தை ஏற்றி சென்று காட்டுக்குள் வைத்து எரித்தது விசாரனையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லட்சுமியையும், கள்ளக்காதலன் சின்னராஜையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை