தற்போதைய செய்திகள்

நிழலில் நிற்க சண்டை போடும் யானைகள்... அழிவுப் பாதையை நோக்கி செல்கிறதா இயற்கை

தந்தி டிவி
• நிழலில் நிற்பதற்கு காட்டு யானைகள் மோதிக் கொண்ட சம்பவம் இயற்கை அழிவுப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. • கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 5 காட்டு யானைகள் ஓசூர் அருகே உள்ள சூதாளம் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள புங்கமரங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் முகாமிட்டுள்ளன. • இந்த யானைகளை 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது ஓசூரில் வழக்கத்திற்கு மாறாக வெயில் வாட்டி வரும் நிலையில், யானைகள் ஒதுங்க உயர்ந்த மரங்களில்லாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளன. • நீண்ட நேரமாக வேகாத வெயிலில் அவை நின்ற நிலையில், ஒரு யானை மர நிழலில் இளைப்பாறிய போது, கோபத்தில் மற்றொரு யானை அதை தும்பிக்கையால் தள்ளி விட்டு தான் அந்த மர நிழலில் நிற்பதற்கு சென்றது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு