தற்போதைய செய்திகள்

புதுவை உள்துறை அமைச்சரின் உறவினர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம்.. மத்திய உள்துறை அதிரடி

தந்தி டிவி

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், பா.ஜ.க பிரமுகருமான செந்தில்குமரன், கடந்த மார்ச் மாதம் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில்குமரன் கொலையில் வில்லியனுார் போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து செந்தில்குமரன் கொலை தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், போலீசாரிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்