தற்போதைய செய்திகள்

"பாஜகவிற்கு ஹிமாச்சல மக்கள் கொடுத்த சரியான பதிலடி" - காங் எம்.பி. ஆனந்த் சர்மா

ஹிமாச்சல பிரதேச மாநில மக்கள் பாஜகவிற்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவ பூமியான ஹிமாச்சல பிரதேச மக்கள் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற செய்தியை பாஜகவிற்கு தந்துள்ளதாக கூறியுள்ளார். ராணுவத்தில் இணையவிருந்த இளைஞர்கள் வசித்து வரும் பகுதிகளில் பாஜகவிற்கு சரியான பதிலடி அளிக்கப்பட்டிருப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஹிமாச்சல பிரதேச மக்கள் கருதுவதாக குறிபிட்டுள்ளார். இத்தகைய காரணங்களே பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்