தற்போதைய செய்திகள்

வழக்கிலிருந்து தப்பிக்க மீரா மிதுனை கழட்டிவிட்ட நண்பர் சாம்

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் குறித்த அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மீரா மிதுன், நண்பர் ஷாம் அபிஷேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பட்டியலினத்தவர்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை எனவும், நடிகை மீரா மிதுன் பேசும் போது அருகில் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, நம் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என கருத்து தெரிவித்தார். பின் மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்று, அதற்கு அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை