தற்போதைய செய்திகள்

மனசாட்சியே இல்லாமல் மாணவர்கள் வயிற்றில் அடித்த தனியார் கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட் மதுரை கிளை

தந்தி டிவி

விருதுநகரில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

விருதுநகரில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி செயலர் ஸ்ரீதரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். அதில், எந்த அனுமதியும் இன்றி ஆசிரியர் பயிற்சி என, மாணவர் சேர்க்கையை கல்லூரி நிர்வாகம் நடத்தியுள்ளது - மாணவர்களிடம் மனசாட்சி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஏமாறும் மாணவர்கள் மூலம் தனது வங்கிக் கணக்கை கல்வி நிறுவனம் செழிப்பாக்கி வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதிபதி குறிப்பிட்டார். மாணவர்களின் எதிர்காலம் கருதி, வேறு கல்லூரியில் சேர அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 5 லட்சம் அபராத தொகையை உயர் நீதிமன்ற மதுரை கிளை சட்டப் பணிகள் குழுவிற்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா