தற்போதைய செய்திகள்

"அமைச்சர் சேகர்பாபுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி" - திமுக எம்.எல்.ஏ பரந்தாமன்

தந்தி டிவி

தனது அலுவலக இடமாற்றத்திற்கும் அரசியல் முன்னேற்றத்திற்கும் பேருதவி புரிந்து வரும் அமைச்சர் சேகர்பாபுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி என எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப்படுத்தி கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத்தொலைவார்கள் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி-யின் உரையை பதிவிட்டு எதிர்ப்பைக் கண்டு துவளாமல், எதிரியைக் கண்டு அஞ்சாமல், இலட்சியப் பயணம் தொடர்வோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அமைச்சர் சேகர்பாபு மற்றும் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் இடையே மறைமுக கருத்து மோதல் இருந்து வருவதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் எம்.எல்.ஏ பரந்தாமனின் இந்த ட்விட்டர் பதிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்